மதுரை,--மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் தலைமையில் திரு.வி.க மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 'திருக்குறள் திருவிழா' போட்டி நடந்தது.மணிகண்டன், கவிஞர் ரவி நடுவராக இருந்து திருக்குறள் குறித்து கேள்விகள் கேட்டு மதிப்பெண் வழங்கினர். அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்கள்,ஆசிரியர்கள் பதக்கம், சான்றிதழ் வழங்கினர். பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் செல்வநாதன், சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார், உபன்யாஸ் சரவணகுமார் பங்கேற்றனர்.