வாடிப்பட்டி,--வாடிப்பட்டி வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 19 விவசாயிகளின் 41 ஆயிரத்து 160 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 10 வியாபாரிகள் பங்கேற்றனர். மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.6.63 முதல் ரூ.12.15 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.3.34 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. மேலும் 6 விவசாயிகளின் 357 கிலோ கொப்பரை ஏலத்தில் 8 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.55.10 முதல் ரூ.87 வரை விலை போனது. ரூ.27 ஆயிரத்து 983க்கு வர்த்தகம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement