மதுரை,- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஒரு கிலோ மல்லிகை விலை ரூ.3000மாக உயர்ந்தது.
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ பிச்சி ரூ.2000, முல்லை ரூ.1800, சம்பங்கி ரூ.200 பட்ரோஸ் ரூ.300, செவ்வந்தி ரூ.200, செண்டுப்பூ ரூ.120க்கு விற்கிறது. மல்லிகை மட்டும் அதிகபட்சமாக ரூ.3000 வரை விலை உயர்ந்துள்ளது. பிற பூக்களின் விலையும் ஓரளவு உயர்ந்துள்ளது.
ஏற்கனவே பனியால் பூக்கள் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகையும் வருவதால் மேலும் விலை அதிகரித்தது.