திருக்கோவிலுார் : வேளாண்துறை சார்பில் திருக்கோவிலுார் அடுத்த கீரனுாரில் விவசாயிகளுக்கு 'ட்ரோன்' மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
திருக்கோவிலுார் அடுத்த கீரனுாரில் திருக்கோவிலுார் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் கீழ், ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல் விளக்கம் பழனிவேலு என்பவருக்கு சொந்தமான நெல் வயலில் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் தலைமை தாங்கினார்.
தரக் கட்டுப்பாட்டு அதிகாரி அன்பழகன் முன்னிலை வகித்தார். ட்ரோன் மூலம் நானோ யூரியா வயலில் தெளிக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
உதவி வேளாண்மை அலுவலர் மகாதேவன், ட்ரோன் இயக்குபவர் செல்லையா உட்பட பலர் பங்கேற்றனர்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார்.