புதுச்சேரி : தவளக்குப்பம் அடுத்த டி.என்.,பாளையத்தில் உள்ள ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் மேரி ஜான்சன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரங்கநாதன், விழா பொறுப்பாசிரியர்கள் சீதா, ரெபாக்கா, பவாணி, காய்த்ரி, டெல்பி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
துவக்க நிகழ்ச்சியாக காயத்ரி, தர்ஷினி, சாய்ஸ்ரீ ஆகியோரின் பரதநாட்டியம் நடந்தது.
தொடர்ந்து ஆசிரியர்கள் சரண், தீபிகா ஆகியோர் முன்னிலையில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் மயிலாட்டம், பொங்கல் சிறப்பு பாடல்கள் பாடியும், பண்டிகை குறித்து உரையாடினர்.
பின்னர் கோலப்போட்டி, கபடி, கயிறு இழுத்தல், உறியடித்தல், சிலம்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
மழலையர் பிரிவு மாணவர்கள் மரக்கன்று நட்டனர். இறுதியில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை ஆசிரியர்கள் விஜயலட்சுமி, மகேஸ்வரி, வனிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.