மதுரை,-விருதுநகர் மாவட்டம் சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரியில் மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான உடல்திறன் போட்டி நடந்தது. இதில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் 2ம் ஆண்டு அனிமேஷன் மாணவர் லோகேஸ்வரன் 70 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
இம்மாணவரை கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பதக்கம் அணிவித்து கவுரவித்தார். முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் அர்ச்சுனன், அகாடமி டீன் ப்ரியா, உடற்கல்வி இயக்குநர் பாண்டியராஜன் பாராட்டினர்.