புதுச்சேரி,: பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியின் 175ம் ஆண்டையொட்டி கட்டப்பட்டுள்ள புனித சூசையப்பர் ஆலையத்தை நாளை 15ம் தேதி மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ்ட் கலிஸ்ட் திறந்து வைத்து கூட்டு திருப்பலி நடத்துகிறார்.
இதுகுறித்து பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியின் 175ம் ஆண்டு துவக்கத்தையொட்டி பள்ளி வளாத்தில் உள்ள பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலயத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டப்பட்டது.
இந்த ஆலையத்தை நாளை 15ம் தேதி மாலை 5.15 மணிக்கு கடலுார் - புதுச்சேரி மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ்ட் கலிஸ்ட் திறந்து வைத்து கூட்டுத்திருப்பலி நடத்துகிறார். தொடர்ந்து 175ம் ஆண்டு ஜூப்லி லோகோவை முதல்வர் ரங்கசாமி திறந்து வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.