உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் பைக் விபத்தில் 2 மாணவர்கள் இறந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, கார்னேஷன் தெருவைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் மகன் நித்திஷ்குமார், 18; திருவெண்ணைய்நல்லுார் அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பன்னீர் மகன் விஷ்வா, 16; உளுந்துார்பேட்டை பெஸ்கி மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நாராயணன் மகன் மணிமாறன், 18; ஐ.டி.ஐ., படித்து வருகிறார்.
மூன்று பேரும் நேற்று இரவு 7:00 மணிக்கு பஜாஜ் கவாஸ்கி பைக்கில் உளுந்துார்பேட்டை பகுதியில் இருந்து அஜீஸ் நகர் ரவுண்டானா நோக்கிச் சென்றனர். அரசு ஐ.டி.ஐ., எதிரே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் நித்திஷ்குமார், விஷ்வா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மணிமாறன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.