கம்பம்,; கம்பமெட்டு ரோடு ஒடைப்புறம்போக்கில் ஒருவாரத்திற்கு முன் வெட்டிய மரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கம்பமெட்டு ரோட்டில் வருவாய்த்துறைக்கு சொந்தமான ஓடை புறம்போக்கில் வளர்ந்துள்ள மரங்களை கும்பல் ஒன்று ஜன. 2ல் வெட்டியது.
மறுநாள் கம்பம் ஆர்.ஐ., நாகராஜன், வி..ஏ.ஒ. தெய்வேந்திரன் ஆய்வு செய்து ஆறு புளிய மரங்கள், இரண்டு இலவ மரங்களை வெட்டியதாக 11 பேர்கள் மீது வடக்கு போலீசில் புகார் செய்தனர், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் வெட்டிய மரங்களை நான்கு நாட்களுக்கு பின் சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் பறிமுதல் செய்து, வி.ஏ.ஓ. அலுவலகத்தில் அடுக்கி வைத்தனர். அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள மரம் வெட்டுவதை தடுக்க ஆர்.டி.ஓ., தாசில்தார் தனி கவனம் செலுத்த வேண்டும். மரங்களை வளர்க்க அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது உயர் அதிகாரிகளின் கடமையாகும்.