விழுப்புரம் :L காணை அடுத்த செம்மேடு ஊராட்சியில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.
செம்மேடு ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். காணை ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் ராஜா, முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், ஒன்றிய துணைச் சேர்மன் வீரராகவன், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, சக்கரவர்த்தி, ஏரப்பன், ரவிச்சந்திரன், நாராயணசாமி, கருணாகரன், சிவராமன், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.