மரக்காணம், : கோட்டக்குப்பம் அடுத்த கொழுவாரி, சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.விழாவிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, பொங்கல் வைத்து கொண்டாடினார். விழாவில், கூடுதல் கலெக்டர் சித்ரா, நகர மன்ற தலைவர் உஷா, கூடுதல் இயக்குனர் கவிதா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனா, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகாதேவி, துணைத் தலைவர் பர்வ கீர்த்தனா, ஒன்றிய செயலாளர் ராஜி உட்பட பலர் பங்கேற்றனர்.