புதுச்சேரி : யூ.டி.சி., எல்.டி.சி., மற்றும் ஸ்டோர் கீப்பர் பணிக்கான இலவச மாதிரி தேர்வு இன்று 14ம் தேதி நடக்கிறது.
சுயம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் இணைந்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சியை அளித்து வருகின்றது. வருகின்ற யூ.டி.சி., எல்.டி.சி., ஸ்டோர் கீப்பர் தேர்விற்கான இலவச மாதிரித் தேர்வு நடத்த திட்டமிட்டு ஆன்லைனின் பதிவு நடைபெற்றது.
அதில், இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துளனர். இவர்களுக்கான மாதிரி தேர்வு இன்று லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரி மற்றும் முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரிகளில் நடக்கிறது.
பதிவு செய்த அனைவருக்கும் தேர்வு நுழைவு எண், நேரம் மற்றும் தேர்வு மையம் ஆகியவை வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த மாதிரி தேர்வு புதுச்சேரி மட்டுமல்லாமல் காரைக்கால் மற்றும் மாகியிலும் நடக்கின்றது.
தேர்வர்களுக்கு தேர்வு எண், இடம் மேலும் விபரங்களுக்கு 9486204334 / 9486334648 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement