போடி.-போடி நகராட்சி பகுதியில் போகி பண்டிகையின் போது பழயை பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுவதை தவிர்க்க கோரி விழிப்புணர்வு மனிதசங்கிலி ஊர்வலம் நடந்தது.
போகி கொண்டாட்டத்தில் பழைய, தேவையற்ற பொருட்களை எரித்து சுற்றுச் சூழலை மாசு படுத்த வேண்டாம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பையை எரிக்காமல் வீடு தேடி வரும்துாய்மை வாகனங்களிலும், மயானக்கரை ரோடு நுண் உர மையம், வெங்கட்டம்மாள் பார்க், தென்றல்நகர் நகராட்சி வாகனம் நிறுத்துமிடம், போடிமெட்டு ரோடு கிளப் அருகில், சுப்புராஜ் நகர் பயணியர் விடுதி பகுதியில் ஜன.14-ம் தேதி வரை நகராட்சி மூலம் மக்களிடமிருந்து குப்பைகள் பெறப்படும்.
இதனை மக்கள், வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்த கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வுக்கான மனித சங்கிலி ஊர்வலம் நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி, தி ஸ்பைஸ் வேலி பப்ளிக் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளி மாணவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.