பெரியகுளம்,-லட்சுமிபுரம் ஸ்ரீரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி டேக்வாண்டோ போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்று,மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.
தேனி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கத்தினர் பொம்மையைக் கவுண்டன்பட்டியில் ஜன.8ல் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தினர். இதில் லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 34 பேர் பங்கேற்றனர்.
14 மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கமும், 11 மாணவ, மாணவிகள் வெள்ளிப் பதக்கமும், 7 மாணவ,மாணவிகள் வெண்கலப் பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையும் கைப்பற்றி முதலிடம் பிடித்தனர். முதல் இரண்டு பதக்கங்கள் பெற்ற 21 மாணவ, மாணவிகள் ஜனவரி 21, 22 ல் திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியளித்த தினேஷ்குமாரை, பள்ளி தாளாளர் லதா ஜெகதீசன், செயலாளர் விஜயராணி, முதல்வர் மருதமாலதி பாராட்டினர்.--