கம்பம்,- -ஊராட்சிகளில் நடைமுறைக்கு வராத ஆன்லைன் வரி வசூல் திட்டம் செயல்படுத்தாமல் உள்ளனர்.
இணைய வழி வரி வசூல் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ராட்சிகளுக்கும் விரிவுபடுத்த அரசு உத்தரவிட்டு கடந்தாண்டு நவ. 24 முதல் மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சியும், டிசம்பர் முதல் தேதி முதல் வட்டாரத்திற்கு ஒரு ஊராட்சியும், டிச. 15 முதல் அனைத்து ஊராட்சிகளிலும், வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற்றிட வேண்டும், நேரடியாக வசூலிக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்த வில்லை. ஊராட்சிகளுக்கு அதற்குரிய கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட வசதிகளும் செய்து தர வில்லை. அவற்றை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் மட்டுமே சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்,வட்டாரத்திற்கு ஒரு ஊராட்சி என்பதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சியில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.டி.ஓ.,க்கள் கூறுகையில், கம்ப்யூட்டர்கள் வாங்க ஆன்லைன் டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் வட்டாரத்திற்கு ஒரு ஊராட்சி செயல்படுத்தப்படும். உத்தமபாளையம் ஒன்றியத்தில் ராமசாமி நாயக்கன்பட்டி, கம்பம் ஆங்கர்பாளையம் ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.