பெரியகுளம்,-பெரியகுளம் நவாப் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ்,செயலாளர் பஷீர் அகமது நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பினர்கள், வி.சி., கட்சி லோக்சபா தொகுதி செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் டி.எஸ்.பி., கீதாவிடம் மனு அளித்தனர்.
அதில் புது பஸ் ஸ்டாண்ட்,வி.ஆர்.பி., நாயுடு தெருவில் பார் வசதியுடன்,தனியார் மதுகடை திறக்க வேலைகள் நடந்து வருகிறது. இப் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஏராள மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். பஸ் ஸ்டாண்டுக்கு பொதுமக்கள் பலர் வருகின்றனர். மதுகடையால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே இங்கு மதுகடை திறக்க அனுமதிக்ககூடாது என கோரினர்.