மூணாறு,- -மூணாறு ஊராட்சி தலைவரை கண்டித்து காங்கிரஸ் மகளிரணியினர் துடைப்பத்துடன் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
மூணாறு ஊராட்சி தலைவர் பிரவீணா காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாவும், அவர் பதவி விலகக் கோரியும் வலியுறுத்தி காங்., மகளிரணியினர் துடைப்பத்துடன் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
நகரில் ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று ஊராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தேவிகுளம் ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தை முற்றுகையிட்ட சென்றனர்.
அவர்களை அலுவலக நுழைவு பகுதியில் இன்ஸ்பெக்டர் மனேஷ் கே. பவுலோஸ் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதன்பிறகு கண்டன கூட்டம் நடந்தது. அதில் ஊராட்சி முன்னாள் தலைவரும், உறுப்பினருமான மணிமொழி மற்றும் உறுப்பினர்கள் கனகம்மாள், அஷ்டலெட்சுமி, தீபா, தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜாக்குலின்மேரி உள்பட பலர் பங்கேற்றனர்.