கம்பம்,-கம்பம் நகர் பா.ஜ. சார்பில் பொங்கல் விழா நகர் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டியன், பொது செயலாளர் மாரிசெல்வம் பங்கேற்றனர். மாவட்ட மகளிர் அணி தலைவர் முத்துமணி, நகர் மகளிரணி தலைவர் கோமதி, இளைஞர் அணி செயலாளர் கணபதிரங்கன், இளைஞரணி தலைவர் விஸ்வாக் பங்கேற்றனர். 50 க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.
உத்தமபாளையம்: நகர் பா.ஜ. சார்பில் பொங்கல்விழா நகர் தலைவர் தெய்வம் தலைமையில் நடந்தது.
மாவட்ட பொது செயலாளர் தங்க பொன்ராசா, மண்டல் பொது செயலாளர் மாரி ராசா, பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாண்டியன், பொது செயலாளர் மாரிச்செல்வம் பங்கேற்றனர். மாநில மகளிரணி செயலாளர் ஜெயமணி, மாவட்ட செயலாளர் கவுசல்யா, பொது செயலாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சின்னமனுார்: சின்னமனூரில் பா.ஜ. சார்பில் பொங்கல் விழா நகர் பொதுச்செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நகர் நிர்வாகிகள், மகளிரணியினர் பங்கேற்றனர்.