கடலுார், : கடலுார் சங்கர பக்த ஜன சபாவில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெருவில், சங்கர பக்த ஜன சபா உள்ளது. இங்கு, நேற்று காலை 8:30 மணிக்கு மேல், மதியம் 1:30 மணிக்குள், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருக்கல்யாணத்தையொட்டி, கோபாலசுந்தர பாகவதர் தலைமையில் பூஜைகள், காலை 8:30 மணிக்கு துவங்கி பகல் 1:30 மணி வரை நடந்தது. ஏற்பாடுகளை, சங்கர பக்த ஜன சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement