கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தாளாளர்கள் குமார், திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
கல்வி நிறுவனங்களின் செயலாளர் கோவிந்தராஜ், கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர், பள்ளி முதல்வர் தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் ரஹமதுல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் முன்னிலை வகித்தனர்.
மாணவ, மாணவிகளிடையே சமத்துவ உணர்வு, மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் பாஸ்கர், ஆசிரியர்கள் வாசுதேவன், ரமேஷ் மற்றும் துறைத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாளாளர் மனோகர் குமார் சுரானா, செயலாளர் அசோக்குமார் சுரானா ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் ஈஸ்வரன் தங்கராசு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சின்னசேலம் அடுத்த ராயப்பனுார் மகாகவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் குமார், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் உமா வரவேற்றார். சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கார்த்திகாயினி, சுதா, ஜெயா, அருளரசி உட்பட பலர் உடனிருந்தனர்.