காரைக்கால் : காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லுாரியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து மஞ்சள் சுற்றிய புதிய பானையில் பொங்கல் வைத்தனர்.
ஒன்று கூடி வைத்த பொங்கலுடன் கரும்பு, பனங்கிழங்கு ஆகியவற்றுடன் படைத்து சூரியபகவானுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதில் என்.எஸ்.எஸ்., மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.