ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி - காவனுார் இடையே வெள்ளாற்றில் பாலம் கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளிப்பாடி - காவனுார் இடையே வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட இப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். நேற்று காவனுார், மருங்கூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வெள்ளாற்றில் கிராம மக்கள் பயன் படுத்தி வந்த தற்காலிக சாலை துண்டிக்கப்பட்ட பகுதியில் நின்று கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தகவல் அறிந்து விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.