சிதம்பரம் : பரங்கிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய விலையில் உளுந்து பயறுகளை வாங்கி, விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் உதவி இயக்குனர் நந்தினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
பரங்கிப்பேட்டை வேளாண் விரிவாக்கம் மையத்தில் மானிய விலையில் உளுந்து விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் சர்வே எண், ஆதார் எண், மொபைல் போன் எண் ஆகியவற்றுடன் வேளாண் விரிவாக்க மையத்தை அனுகி மானிய விலையில் உளுந்தை பெற்று பயனடையலாம்.