புதுச்சேரி : பாரதிபுரம் ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம் நடக்கின்றது.
புதுச்சேரி பாரதிபுரம் ஐயப்ப சுவாமி கோவிலில் மகர சங்கராந்தி திருவாபரண தரிசன விழா இன்று 14ம் தேதி காலை 5:00 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து 9:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு 25 கலசபூஜை, சந்தன அபிஷேகம் அஷ்டாபிஷேகம் நடக்கின்றது.
மாலை 4:30 மணிக்கு திருவாபரண பெட்டி ஊர்வலம் மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமி கோவிலுக்கு வருகிறது.
மாலை 6:45 மணிக்கு முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் திருவாபரண தரிசனம் மற்றும் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து இரவு 8:45 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிேஷகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.