விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது.
மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி டீன் குந்தவி தேவி தலைமை தாங்கி சமத்துவ பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் ஆடலரசன், துணை முதல்வர் டாக்டர் சங்கீதா, ஆர்.எம்.ஓ., வெங்கடேசன் ஏ.ஆர்.எம்.ஓ., நிஷாந்த், நிர்வாக அதிகாரிகள் சிங்காரம், ஆனந்த ஜோதி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.