கடலுார : கடலுார் போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.
கடலுார் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் லிட்டில் பிளவர் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், செந்தில்குமார் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலையில் நடந்து செல்லும் போது இருபுறமும் பார்த்து கவனமாக நடந்து செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தலைக் கவசம் அவசியம் அணிந்து செல்ல வேண்டும், போக்கு வரத்து விதிமீறலில் ஈடுபடக் கூடாது.
போக்கு வரத்து சட்டத்தை கடைப்பி டித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.