விழுப்புரம் : விழுப்புரத்தில் மத்திய மாவட்ட இளைஞர் காங்., செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் பிரபாகரன் வரவேற்றார். மத்திய மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் முன்னிலை வகித்தார். தமிழக இளைஞர் காங்., தலைவர் லெனின் பிரசாத் சிறப்புரையாற்றினார்.
மேலிட பொறுப்பாளர் வித்யா பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயராஜன், மாநில பொதுச் செயலாளர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, பாலசுப்ரமணியன், மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், விஜயரங்கன், காஜா மொய்தீன், விஸ்வநாதன், முகமது இம்ரான்கான், சேகர், குப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கத்தை, கிராமம் தோறும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று விளக்க வேண்டும். வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரம் தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டிப்பது. விழுப்புரம் நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.