சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
இயற்கை விவசாயி ராமதாஸ் தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் ராஜமோகன், கீரப்பாளையம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், ஊராட்சி துணைத் தலைவர் கவிதாசுகுமாறன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் முத்து வரவேற்றார்.
கிராம சபைக்கூட்டத்தில் சமூக தணிக்கையாளர் வினோதினி, செயல்படுத்தபட்ட திட்டங்களுக்கான வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தார். கிராம சபை எழுத்தர் முருகன் திட்டங்கள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், சுகாதாரப் பணிகள், ஊராட்சி பணிகளை எழுதி பதிவு தீர்மானம் வாசித்தார். வி.ஏ.ஓ.. தமிழரசி மற்றும் வார்டு உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.