புதுச்சேரி, : புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொங்கல் விழா காந்தி திடலில் இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு நடக்கிறது.
சுற்றுலாத்துறை அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொங்கல் விழா காந்தி திடலில் இன்று 14ம் தேதி துவங்கி வரும் 17ம் தேதி வரை நடக்கிறது.
நிகழ்ச்சியில் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், மாட்டு வண்டி ஊர்வலம் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைக்கிறார்.
இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.