புதுச்சேரி : பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை கடந்த 1ம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் நேற்று புதுச்சேரி நுாறு அடி சாலை அருகே உள்ள நடேசன் நகர் பகுதியில் உள்ள தெருவோர கடைகள் மற்றும் மதுபான கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.