குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குள்ளஞ்சாவடி சந்திப்பில் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி தலைமையிலான போலீசார், ெஹல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது, மது அருந்தாமல் வாகனம் இயக்குவது, வேகமாக வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் ஆபத்து, அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்து, வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.