புவனகிரி, : புவனகிரியில் காசு வைத்து சூதாடிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது பூதவராயன்பேட்டை காளியம்மன் கோவில் பின்புறம் காசு வைத்து சூதாடினர்.
இது தொடர்பாக அதேப் பகுதியைச் சேர்ந்த முருகன்,27; அன்பு,26; சுரேஷ்,31 ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.