விழுப்புரம், : கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் போலீசார், உழவர் சந்தை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்ற, சாமூண்டீஸ்வரி நகரைச் சேர்ந்த முருகன் மகன் சூரியகுமார், 22; என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குட்கா விற்றவர் கைது
இதே போன்று, வளவனுார் போலீசார் சாலையாம்பாளையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த முத்துகுமரன், 40; என்பவர் தனது பெட்டிக்கடையில் குட்கா விற்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.