விருத்தாசலம் : தே.மு.தி.க., நகர செயலாளராக கண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தே.மு.தி.க., வில் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, வட்ட பொருப்பாளர்கள் சமீபத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள் ளனர். அதன்படி, விருத்தாசலம் நகர செயலாளராக, பெரியகண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, நகராட்சி 2வது வார்டு கவுன்சிலர் ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, அவை தலைவர் ராஜாராமன், துணை செயலர் ராஜி ஆகியோர் பரிந்துரையின் பேரில், கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ராஜ்குமாரை நகர செயலாளராக நியமனம் செய்துள்ளனர்.
அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.