விழுப்புரம், : முன்விரோத தகராறில் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த சிந்தாமணியைச் சேர்ந்தவர் கண்ணன், 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 50; இருவருக்குமிடையே புறம்போக்கு வழி பிரச்னையில் முன்விரோதம் இருந்து வருகிறது.
இதனால், கடந்த 11ம் தேதி ஏற்பட்ட தகராறில், கண்ணனை, தட்சணாமூர்த்தி குடிபோதையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின்பேரில், தட்சணாமூர்த்தி மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.