நிலக்கோட்டை,-- கடும் பனி பொழிவால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு வரத்து குறைய மல்லி கிலோ ரூ. 3500-க்கு விற்றது.
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகம் உள்ள நிலையில் சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் சரியாக மலராமல் உள்ளன. இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்து உள்ளது. மார்க்கெட்டிற்கு 100 டன் வரவேண்டிய பூக்கள் 20 டன் கூட வரத்து இல்லை.
இந்நிலையில் பொங்கல் திருநாளும் சேர்ந்துள்ளதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லி கிலோ ரூ. 3500, முல்லை ரூ.2000, ஜாதி ரூ. 1700, கனகாம்பரம் ரூ. 1200, சம்பங்கி ரூ. 200, சென்ட் ரூ. 100, செவ்வந்தி ரூ. 200, பன்னீர் ரோஜா ரூ. 250, பட்டன் ரோஸ் ரூ. 270க்கு விற்கப்பட்டது.
விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மல்லிக்கு மாற்றாக வாசனை இல்லாத மல்லியான காக்கரட்டான் கிலோ ரூ. 2000 க்கு விற்பனையானது.