திண்டுக்கல்,;சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டுதிண்டுக்கல் கொடைரோடு டோல்கேட் அருகேதிண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் டிராக்டர், டிரெய்லர் உள்ளிட்ட வாகனங்களால் விபத்து நடக்காமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒளிரும் பட்டைகள் வண்டிகளில் ஒட்டப்பட்டது.சாலை விதிகளை மீறாமல் விதிகளை மதிக்கவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோவன், சண்முக ஆனந்த் பங்கேற்றனர்.