வடமதுரை,--உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கொம்பேரிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்திய நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம், ஊராட்சி நிர்வாகம் இணைந்து சிறுதானிய பொங்கல் விழா நடத்தின.
ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வையநமசி முன்னிலை வகித்தார். இசை நிறுவன அறங்காவலர் மகாலட்சுமி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் வீரமணி, கார்த்திகா, ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரிநீலக்கண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் கருப்பையா பங்கேற்றனர்.
மதிப்பு கூட்டிய சிறுதானிய உணவுகள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.