விருத்தாசலம், : விருத்தாசலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் விசுவநாதன் பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். இதில், மாணவர்கள் தமிழ் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர்.
மேலும், கபடி, கயிறு இழுத்தல், ஓட்ட பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டி, நடனம், கோலாட்டம், கும்மி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.