நத்தம்,-நத்தம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார்.
செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார். இளநிலை உதவியாளர் அழகர்சாமி அறிக்கை வாசித்தார்.
நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பில் வரப்பெற்ற பணிகள், மின்கல வாகனங்கள் ஒப்பந்த புள்ளி, அனைத்து வார்டுகளிலும் புதியதாக தெரு விளக்குகள் அமைப்பது, பகுதிக்குழு ,வார்டு கமிட்டி மூலம் அனைத்து வார்டுகளிலும் முன்னுரிமைப்படி பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சகுபர் சாதிக், ராமு, கலாவதி, வசந்த சுஜாதா, மாரிமுத்து,சிவா, கண்ணன், துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி கலந்து கொண்டனர்.
Advertisement