திண்டுக்கல்-மதுரை காமராசர் பல்கலை சார்பாக ஜி.டி.என்.கல்லுாரி மாணவி அனுசியா பிரியதர்ஷினி பஞ்சாபில் நடந்த அகில இந்திய பல்கலை இடையான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று தங்க பதக்கத்தை வென்றார்.
இவரை கல்லுாரி தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதான கமிட்டி செயலாளர் சண்முகம், மாவட்ட ஹாக்கி சங்கத்தின் நிறுவனர் ஞானகுரு, கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி, உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர் வாழ்த்தினர்.