திண்டுக்கல்,-திண்டுக்கல் அரிமா சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா,குடும்ப விழா, நிர்வாக குழு,பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் லயன்ஸ் மீட்டிங்ஹாலில் நடந்தது.
லயன்ஸ் சங்க தலைவர் வழக்கறிஞர் குப்புசாமி தலைமை வகித்தார்.செயலாளர் வழக்கறிஞர் மலைராஜன் வரவேற்றார்.
பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முதலாம் துணை ஆளுநர் ராதாகிருஷ்ணன்,முன்னாள் மாவட்ட அமைச்சரவைச் செயலாளர் மோகன்காந்தி,மாவட்ட முதன்மை ஆலோசகர் ஆடிட்டர் ரவீந்திரன் பேசினர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம்,ரத்ததான மாவட்ட தலைவர் மணிகண்டன்,அழகர்சாமி, நாகசுந்தரம், ராஜாங்கம்,ஜோதிகுமார்,சுப்பிரமணி, துரைசிங்கம் பங்கேற்றனர்.பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.