கண்டமங்கலம், : கண்டமங்கலத்தில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்ற கிராம மக்களிடம் அதிகாரி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டமானப் பணி நடக்கிறது.
இந்நிலையில், கண்டமங்கலத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்
இது தொடர்பாக கடந்த 4ம் தேதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதில், நிறைவேறும் வரை மேம்பால பணிகளை தொடர விடமாட்டோம் என பொதுமக்கள் அறிவித்தனர். இதனால், மேம்பால பணிகள் நடக்கவில்லை.
இதுவரை அதிகாரிகள் சுரங்கபாதை அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மீண்டும் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
தகவலறிந்த மாவட்ட திட்ட இயக்குனர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை 10:00 மணிக்கு ஒன்றிய சேர்மன் வாசன், ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன் மற்றும் கிராம முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 11:30 மணிவரை நடந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement