விழுப்புரம், : விழுப்புரத்தில் பா.ஜ., சார்பில் பொங்கல் விழா நடந்தது.
விழுப்புரம், மருதுார் வடபத்திர காளியம்மன் கோவில் திடலில் நடந்த விழாவிற்கு, பா.ஜ., நகர தலைவர் வடிவேல் பழனி தலைமை தாங்கினார். மாநில பொருளாதார பிரிவு துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சம்பத் விழாவைத் துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
பா.ஜ., சார்பில் பொதுமக்கள் முன்னிலையில் புது பானையில் பொங்கலிட்டனர். தொடர்ந்து மாணவர்களின் சிலம்பம், மல்லர் கம்பம், கயிறு ஏறுதல் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. பா.ஜ., நிர்வாகிகள் ஜெகதீசன், தாசசத்தியன் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.