வானுார் : ஆரோவில் அருகே இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.
திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி பஸ் நிறுத்தத்தில் கடந்த 11ம் தேதி இரவு 50 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் நபர், அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், இறந்தவர், விக்கிரவாண்டி அடுத்த தென்னவராயன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், 55; என தெரியவந்தது.
லாரி டிரைவரான இவர், கடந்த 20 ஆண்டுகளாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, திருக்கனுார் அடுத்த கூனிச்சப்பட்டில் வசித்து வந்தது தெரியவந்தது.
சம்பவத்தன்று உடல் நிலை சரியில்லாததால் இறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று பார்த்திபன் உடலை ஆரோவில் போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.