திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் உட்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருக பூபாலன், 40; இவர் நேற்று காலை தனது குடும்பத்துடன் சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ேஹாண்டா சிட்டி காரில் சென்று கொண்டிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் பெட்ரோல் பங்க் அருகே 7:45 மணியளவில் சென்ற போது, முன்னால் சென்ற ஹூண்டாய் வெனிவ் காரை ஓட்டிச் சென்றவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பின்னால் வந்த வேல்முருக பூபாலனின் கார் மோதியது. அதனைத் தொடர்ந்து, அதன் பின்னால் வந்த இன்னோவா கார், மினி வேன் உட்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார்கள் மட்டும் லேசாக சேதமானது. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.