விழுப்புரம், : விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடந்தது.
நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சித்திக் அலி, கமிஷனர் சுரேந்திரஷா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள், பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும்.
வரி செலுத்தும் மக்கள் பிரச்னைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை குறித்து பேசினர்.
அதற்கு பதிலளித்த நகர மன்ற தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பதில் கூற வேண்டும் என்றார்
இதையடுத்து, நகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு பணிகளுக்கு 27.37 கோடி ரூபாயில் மேற்கொள்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.