மந்தாரக்குப்பம், : கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் தலைமை தாங்கினார். சாந்தி ராஜமாரியப்பன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணி ஜோசப் வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதிலட்சுமி, விமல்ராஜ், நத்தகுமார், ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி, கருங்குழி அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கனகசபை, ஆசிரியர்கள் சாந்தி, மேரிபுஷ்பலதா, லயோனா, கீதா மஞ்சித், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ராஜ பாக்கியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.