விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 47; இவரது மனைவி கலையரசி, 45; இருவரும் நேற்று, சொந்த ஊரான பேரங்கியூருக்கு மொபட்டில் சென்று, திரும்பினர்.
விழுப்புரம் அரசு ஊழியர் நகர் அருகே வந்தபோது, எதிரே பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், கலையரசியின் நான்கரை சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.