கடலுார், : தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடுவாரியம் மற்றும் கடலுார் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை இணைந்து, கடலுார் தேவனாம்பட்டினம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தலைமை ஆசிரியை தேவிப்பிரியா தலைமை தாங்கினார். ஆசிரியை மோகதாயினி வரவேற்றார். ஆசிரியை ஆரோக்கியமேரி முன்னிலை வகித்தார்.
கடலுார் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் பிளாஸ்டிக் மற்றும் டயர் போன்ற பொருட்களை எரிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் வினாடி வினா நடைபெற்றது. மாணவர்கள் , லக்ஷனா, மதுமிதா, ஹம்சினி, ஹபிஷ் பரிசு பெற்றனர். அனைவரும் புகையில்லா போகியை கொண்டாடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். புகையில்லா போகி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
பட்டதாரி ஆசிரியை லட்சுமி நன்றி கூறினார்.